Sri Lanka vs Pakistan 2nd Test: இலங்கையை ஒயிட்வாஷ் செய்து பாகிஸ்தான் நம்பர் 1; இந்தியாவுக்கு 2ஆவது இடம்!

Published : Jul 28, 2023, 12:15 PM IST
Sri Lanka vs Pakistan 2nd Test: இலங்கையை ஒயிட்வாஷ் செய்து பாகிஸ்தான் நம்பர் 1; இந்தியாவுக்கு 2ஆவது இடம்!

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ச் சாம்பியன்ஷிப் ஸ்டாண்டிங் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இதில், இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

டூப்ளிகேட், குழப்பத்தை தவிர்க்க, பிசிசிஐ முடிவு: டிக்கெட் பற்றிய திட்டத்தை சமர்ப்பிக்க பிசிசிஐ உத்தரவு!

இதில், முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக தனஞ்சயா டி சில்வா 57 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சைப் பொறுத்த வரையில் பாகிஸ்தான் அணியில் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். நசீம் ஷா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் 201 ரன்கள் குவித்தார். ஆகா சல்மான் 132 ரன்களும், முகமது ரிஸ்வான் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

WI vs IND 1st ODI: 7ஆவது இடத்தில் இறங்க என்ன காரணம்? ரோகித் சர்மா விளக்கம்!

இறுதியாக பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 576 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் இலங்கை 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்து, இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பந்து வீச்சில் பாகிஸ்தானின் நோமன் அலி 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி 2023-2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஸ்டாண்டிங் பட்டியலில் பாகிஸ்தான் நம்பர் 1 இடத்திலேயே நீடிக்கிறது. இந்த 2023-2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெற்றியுடன் பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.

WI vs IND: பொறுப்புடன் ஆடிய இஷான் கிஷான்: வின்னிங் ஷாட் அடித்து கொடுத்த ரோகித் சர்மா; இந்தியா சிம்பிள் வெற்றி!

மேலும், 24 புள்ளிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஸ்டாண்டிங் பட்டியலில் பாகிஸ்தான் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. இந்தியா 16 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 26 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், இங்கிலாந்து 14 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் 2025 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ்.தோனி: ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?