டூப்ளிகேட், குழப்பத்தை தவிர்க்க, பிசிசிஐ முடிவு: டிக்கெட் பற்றிய திட்டத்தை சமர்ப்பிக்க பிசிசிஐ உத்தரவு!

By Rsiva kumar  |  First Published Jul 28, 2023, 11:19 AM IST

ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து டிக்கெட்டுகளை வெளியிடும் நிலையில், வரும் செவ்வாய்க்கிழமைக்குள்ளாக உலகக் கோப்பை டிக்கெட் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு போட்டிகளை நடத்தும் மாநில கிரிக்கெட் சங்கங்களை ஜெய்ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.


ஏற்கனவே ஐபிஎல் தொடர்களில் ஏற்பட்ட டிக்கெட் குழப்பம், அதிக விலைக்கு விற்கப்படுதல், தவறான நிர்வாகம் என்று பலவிதமான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வரும் உலகக் கோப்பை தொடரில் இது போன்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க பிசிசிஐ அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் டிக்கெட் விற்பனையில் குழப்பம் வெடித்தது. எனினும், ரசிகர்கள் பெரும்பாலும் ஆன்லைன் டிக்கெட் முறையை விட நேரடியாக பெற்றுக் கொள்ளும் முறையைத் தான் விரும்புகிறார்கள்.

WI vs IND 1st ODI: 7ஆவது இடத்தில் இறங்க என்ன காரணம்? ரோகித் சர்மா விளக்கம்!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, ஜெய் ஷா, 10 மைதானங்களில் நடக்கும் உலகக் கோப்பை போட்டி மற்றும் வார்ம் அப் போட்டிகள் நடக்கும் 2 மைதானங்களைச் சேர்ந்த மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆலோசனை நடத்தினார். அதில் டிக்கெட் கொடுப்பது முக்கிய அம்சமாக நிகழ்ச்சி நிரலில் இருந்தது.

விசா விவகாரம்... கடைசி நேரத்தில் கழுத்தறுத்த சீனா! இந்திய வுஷூ அணியின் சீனப் பயணம் திடீர் ரத்து!

டிக்கெட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று பிசிசிஐ கூறி வரும் நிலையில், அதற்கான கால அவகாசம் இல்லை. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஒவ்வொரு போட்டிக்கும் டிக்கெட் மேலாண்மை மற்றும் விற்பனை குறித்த திட்டங்களை தயாரிக்குமாறு மாநில கிரிக்கெட் சங்கங்களை பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. காம்பிளெண்டரி டிக்கெட், பொது டிக்கெட் மற்றும் கார்பரேட் டிக்கெட்டுகளுக்கான விலை நிர்ணயம் குறித்த திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

WI vs IND: பொறுப்புடன் ஆடிய இஷான் கிஷான்: வின்னிங் ஷாட் அடித்து கொடுத்த ரோகித் சர்மா; இந்தியா சிம்பிள் வெற்றி!

மேலும், இருக்கை வசதியின் அடிப்படையில் பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு எத்தனை டிக்கெட்டுகளை ஒதுக்க முடியும் என்று விவரங்களையும் கிரிக்கெட் சங்கங்கள் அளிக்க வேண்டும் என்றூம் கேட்டுக் கொண்டுள்ளது.

கூட்டத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆட்டத்திற்கும் டிக்கெட் மேலாண்மை மற்றும் விற்பனை குறித்த திட்டங்களைத் தயாரிக்குமாறு மாநில சங்கங்களை பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. சங்கங்கள் இப்போது பாராட்டு டிக்கெட்டுகள் மற்றும் பொது டிக்கெட்டுகள் மற்றும் கார்ப்பரேட் பெட்டிகளுக்கான விலை நிர்ணயம் குறித்த திட்டங்களை கொண்டு வர வேண்டும். மேலும், இருக்கை வசதியின் அடிப்படையில் பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு எத்தனை டிக்கெட்டுகளை ஒதுக்கலாம் என்ற விவரங்களை சங்கங்கள் அளிக்க வேண்டும்.

ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ்.தோனி: ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி!

முழு டிக்கெட் செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்குவது பற்றிய விவாதங்கள் இருந்தபோதிலும், பிசிசிஐ திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது. ஆன்லைன் டிக்கெட்டுகள் டூப்ளிகேஷனுக்கு வழிவகுக்கும் என்று பிசிசிஐ பயந்து, அதைத் தவிர்க்க, அவர்கள் ஏற்கனவே உள்ள டிக்கெட் மாதிரியைத் தொடர முடிவு செய்துள்ளனர். மேலும், கவுண்டர் டிக்கெட்டிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

  • ஐபிஎல் போட்டிகளைப் போன்று கவுண்டர் மற்றும் டிக்கெட் பார்ட்னர் மூலமாக டிக்கெட் விற்கப்பட இருக்கிறது.
  • ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அப்படி முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்க டிக்கெட் பார்ட்னர் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
  • கவுண்டர் டிக்கெட்டும் விற்பனை செய்யப்படும்.
  • போட்டி மற்றும் இடத்தைப் பொறுத்து டிக்கெட் விலை மாறுபடும்.
  • செவ்வாய்க்கிழமைக்குள் உலகக் கோப்பை டிக்கெட் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாநில சங்கங்களையும் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

 

Major points from Jay Shah press conference: [PTI]

- Changes in dates for World Cup.
- New schedule in 2-3 days.
- Ticket sales soon.
- Free drinking water for fans.
- India A will travel to SA. England A will come to IND.
- Bumrah is fully fit.
- No appeal for Kaur's Ban. pic.twitter.com/glCxJdDKHG

— Johns. (@CricCrazyJohns)

 

click me!