ஐபிஎல் 2023 தொடரில் புதிய ரூல்ஸ் அமல்: டாஸ்க்கு பிறகு பிளேயிங் 11 தேர்வு செய்யலாம்; டெட் பால், பெனால்டி உண்டு!

By Rsiva kumar  |  First Published Mar 23, 2023, 4:08 AM IST

வரும்31 ஆம் தேதி தொடங்கவுள்ள 16ஆவது ஐபிஎல் சீசன் முதல் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது.
 


ரசிகர்கள் கொண்டாடும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த திருவிழா வரும் மே 28 ஆம் தேதி சென்னை, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, மொஹாலி, குஜராத், ஜெய்பூர், லக்னோ, ஹைதராபாத், தர்மசாலா ஆகிய மைதாங்களில் இந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா நடக்கிறது. டெஸ்ட், கிரிக்கெட், ஒரு நாள் போட்டியை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது ஐபிஎல் தான். 10 அணிகள் இடம் பெற்ற இந்த சீசனில் 74 போட்டிகள் நடக்கிறது.

Tap to resize

Latest Videos

வரும் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கும் இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியிலிருந்து புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது டாஸ் வென்ற பிறகு பிளேயிங் 11 குறைத்து அறிவிக்கலாம் உள்ளிட்ட விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அது என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க....

அங்கிட்டு விரட்டுனா இங்கிட்டு வருது, இங்கிட்டு விரட்டுனா அங்கிட்டு போகுது - படாதபாடு பட்டு விரட்டிய பாதுகாவலர்

விதிமுறை 1:

இதுவரையில் டாஸ் வீசுவதற்கு முன்பாக விளையாடும் பிளேயிங் 11 கொண்ட வீரர்களை தேர்வு செய்து எதிரணி கேப்டன் மற்றும் நடுவரிடம் ஒப்படைக்கும் நடைமுறை இருந்தது. ஆனால், இந்த 16ஆவது சீசன் முதல் டாஸ் வென்ற பிறகு பிளேயிங் 11 அணியில் தேர்வு செய்து கொள்ளும் புதிய விதிமுரையை பிசிசிஐ அறிமுகப்படுத்துகிறது. இந்த விதிமுறை வரும் 31 ஆம் தேதி தொடங்கும் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது தொடங்கும். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

விதிமுறை: 2

டாஸ் வென்ற பின் அந்த அணி பேட்டிங்கோ, பவுலிங்கோ என்று எது தேர்வு செய்தாலும், அதற்கேற்ப தனது பிளேயிங் 11ஐ தேர்வு செய்து கொள்ளலாம். இம்பேக்ட் பிளேயர் என்ற விதிமுறையையும் இந்த ஐபிஎல் தொடருக்கு கொண்டு வந்துள்ளனர். ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கும் போது 11 வீரர்கள் மட்டுமின்றி கூடுதலாக ஒரு வீரரையும் போட்டியின் நடுவே சேர்த்துக் கொள்ள முடியும். அப்படி சேர்க்கப்படும் ஒரு வீரரால் பேட்டிங், விக்கெட் கீப்பிங், பீல்டிங் என்று எது வேண்டுமென்றாலும் செய்ய முடியும். 

தொடர்ந்து 3ஆவது முறையாக கோல்டன் டக்கில் வெளியேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

விதிமுறை: 3

போட்டியின் போது வீரர்களுக்கிடையில் சில வாக்குவாதங்கள் நடக்கும். பேட்ஸ்மேனை வம்புக்கு இழுக்கும் வகையில் கீப்பர்களோ, பவுலர்களோ அல்லது பீல்டர்களோ என்று யார் வேண்டுமென்றாலும் இது போன்று அவரகளது கவனத்தை திசை திருப்பும் வகையில் நடந்து கொண்டால், அந்த பந்தை டெட் பால் என்று அறிவிப்பதோடு கூடுதலாக 5 ரன்களும் பெனால்டியாக வழங்கப்படும் என்ற விதிமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

3ஆவது போட்டியில் வெற்றி; சென்னையில் கோட்டை கட்டிய ஆஸ்திரேலியா; 4 ஆண்டுக்கு பிறகு தொடரை கைப்பற்றி ஆஸி, சாதனை!

விதிமுறை: 4

குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்றால், அதற்கு மேல் வீசும் ஒவ்வொரு ஓவரிலும் ஃபீல்டர்கள் உள்வடத்திற்கு வெளியில் 5க்குப் பதிலாக வெறும் 4 ஃபீல்டர்கள் தான் அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய விதிமுறை வரும் 31 ஆம் தேதி தொடங்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அமல்படுத்தப்படுகிறது.

சென்னையில் 5ஆவது வெற்றி; டெஸ்ட், ODI கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியா!

click me!