BAN vs IND: 3வது ODI டாஸ் ரிப்போர்ட்! இந்திய அணியில் இஷான் கிஷன் ஓபனிங்; தீபக் சாஹர் இடத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்

Published : Dec 10, 2022, 11:38 AM IST
BAN vs IND: 3வது ODI டாஸ் ரிப்போர்ட்! இந்திய அணியில் இஷான் கிஷன் ஓபனிங்; தீபக் சாஹர் இடத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.   

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட  தொடரில் ஆடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி ஒருநாள் தொடரை 2-0 என வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இந்திய அணியின் தலைமை தேர்வாளராகும் தரமான முன்னாள் ஃபாஸ்ட் பவுலர்..?

காயம் காரணமாக விலகிய ரோஹித் சர்மா மற்றும் தீபக் சாஹருக்கு பதிலாக இஷான் கிஷன் மற்றும் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான சைனாமேன் பவுலர் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷிகர் தவானுடன் இஷான் கிஷன் ஓபனிங்கில் இறங்குகிறார்.

இந்திய அணி:

ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக். 

BAN vs IND: 3வது ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய அணிக்கு கவாஸ்கர் கடும் எச்சரிக்கை

வங்கதேச அணி:

அனாமுல் ஹக், லிட்டன் தாஸ் (கேப்டன்), யாசிர் அலி, ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், எபடாட் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், டஸ்கின் அகமது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!