இந்திய அணியின் தலைமை தேர்வாளராகும் தரமான முன்னாள் ஃபாஸ்ட் பவுலர்..?

By karthikeyan VFirst Published Dec 9, 2022, 8:28 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக வெங்கடேஷ் பிரசாத் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், இந்திய அணி தேர்வாளர்கள் மொத்தமாக நீக்கப்பட்டனர். சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இதையடுத்து இந்திய அணி  புதிய தேர்வாளர்களுக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது பிசிசிஐ. நவம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. குறைந்தபட்சம் 7 சர்வதேச டெஸ்ட் & 30 முதல் தர போட்டிகள் அல்லது 10 சர்வதேச ஒருநாள் போட்டிகள் & 20 முதல் தர போட்டிகளில் ஆடிய, 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்தது.

BAN vs IND: 3வது ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய அணிக்கு கவாஸ்கர் கடும் எச்சரிக்கை

அதனடிப்படையில், முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத், நயன் மோங்கியா, மனிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ், அஜய் ராத்ரா, ஹேமங் பதானி உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ, அசோக் மல்ஹோத்ரா, ஜதீன் பரஞ்பே, சுலக்‌ஷனா நாயக் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழுவை நியமித்துள்ளது.

இவர்களில் இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் வெங்கடேஷ் பிரசாத் தலைமை தேர்வாளராக தேர்வு செய்யப்படலாம் என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், டிசம்பர் மாத இறுதிக்குள் தேர்வுக்குழு தேர்வு செய்து அறிவிக்கப்படும். சிறந்த அனுபவம் வாய்ந்த இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலரான வெங்கடேஷ் பிரசாத்தும் தலைமை தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். அவர் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்றார்.

ஐபிஎல் 2023: Impact Player விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்..? தெளிவுபடுத்துமா பிசிசிஐ..?

இந்திய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 161 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 96 மற்றும் 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 

click me!