பெத் மூனி அபார பேட்டிங்.. முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Dec 9, 2022, 10:35 PM IST
Highlights

இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டி மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தேவிகா வைத்யா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, ராதா யாதவ், அஞ்சலி சர்வனி, மேக்னா சிங், ரேணுகா தாகூர்.

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

அலைசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), பெத் மூனி, தாலியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, க்ரேஸ் ஹாரிஸ், அன்னாபெல் சதெர்லேண்ட், ஜெஸ் ஜோனாசென், ஆலனா கிங், கிம் கார்த், மேகன் ஸ்கட்.

இந்திய அணியின் தலைமை தேர்வாளராகும் தரமான முன்னாள் ஃபாஸ்ட் பவுலர்..?

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வெர்மா 21 ரன்களும், ஸ்மிரிதி மந்தனா 28 ரன்களும் அடித்தனர். ரோட்ரிக்ஸ் டக் அவுட்டாக, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரும் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங்  ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிச்சா கோஷ் 20 பந்தில் 36 ரன்களும், தீப்தி ஷர்மா 15 பந்தில் 36 ரன்களும் விளாச, 20 ஓவரில் 172 ரன்களை குவித்தது இந்திய மகளிர் அணி.

BAN vs IND: 3வது ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய அணிக்கு கவாஸ்கர் கடும் எச்சரிக்கை

173 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைசா ஹீலி அதிரடியாக ஆடி 23 பந்தில் 37 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான பெத் மூனி தொடக்கம் முதலே அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய மெக்ராத்தும் சிறப்பாக பேட்டிங் ஆடி 29 பந்தில் 40 ரன்கள் அடித்தார். பெத் மூனி 89 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். பெத் மூனியின் அதிரடி பேட்டிங்கால் 18.1 ஓவரில் இலக்கை அடித்து ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

click me!