டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது.
இதுவரை ஆடிய 3 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும். இந்த போட்டியிலும் வென்று, நெதர்லாந்தையும் கடைசி போட்டியில் வீழ்த்தினால் வலுவாக அரையிறுதிக்கு செல்லும்.
undefined
அடிலெய்டில் நடக்கும் இந்தியா - வங்கதேசம் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. தீபக் ஹூடாவிற்கு பதிலாக அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியின்போது காயத்தால் களத்தைவிட்டு வெளியேறிய தினேஷ் கார்த்திக் ஃபிட்டாக இருப்பதால் அவர் ஆடுகிறார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
வங்கதேச அணி:
நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், யாசிர் அலி, மொசாடெக் ஹுசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், டஸ்கின் அகமது.