டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, சூப்பர் 12 சுற்றின் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்கு பின் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் சில கேள்விகள் எழுந்துள்ளன. கேஎல் ராகுல் ஃபார்மில் இல்லாமல் தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார். இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பியுள்ளார். எனவே அவரை இனியும் அணியில் வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்தபோது காயத்தால் வெளியேறினார்.
undefined
எனவே வங்கதேசத்துக்கு எதிராக வரும் நவம்பர் 2ம் தேதி இந்திய அணி ஆடவுள்ள போட்டியில் அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியின் போது காயத்தால் வெளியேறிய தினேஷ் கார்த்திக் அடுத்த போட்டியில் ஆடுவது சந்தேகம். அதுமட்டுமல்லாது அவர் இதுவரை ஆடிய போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக கண்டிப்பாக ரிஷப் பண்ட் ஆடுவார்.
ரிஷப் பண்ட்டை தொடக்க வீரராக இறக்கிவிடலாம் என்ற வலியுறுத்தல்கள் உள்ளன. ரிஷப் பண்ட்டை ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்கிவிட்டு கேஎல் ராகுலை பின்வரிசையில் கூட இறக்க வாய்ப்புள்ளது அல்லது ராகுல் வழக்கம்போல தொடக்க வீரராக ஆடுவார். ரிஷப் பண்ட் 5ம் வரிசையில் ஆடலாம்.
மேலும் கடந்த போட்டியில் ஆடிய தீபக் ஹூடாவிற்கு பதிலாக மீண்டும் அக்ஸர் படேல் சேர்க்கப்படலாம்.
உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.