நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிலேட் பகுதியில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணியில் மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஜாகிர் ஹசன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இந்த வீரர் தான் 30 முதல் 35 கோடி வரையில் ஏலம் பெற முடியும்; ரச்சின், ஸ்டார்க் ஹெட் அல்ல!
இதில், ஜாகிர் ஹசன் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷாண்டோ விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக நியூசிலாந்து ஸ்பின்னர் கிளென் பிலிப்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பிறகு மொமினுல் ஹக் களமிறங்கி நிதானமாக விளையாடி 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் 166 பந்துகள் பிடித்து 11 பவுண்டரி உள்பட 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து முஷ்பிகுர் ரஹீம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷஹாதத் ஹூசைன் 24 ரன்களில் நடையை கட்டினார். வங்கதேச அணி வீரர்கள் டெஸ்ட் போட்டியைப் போன்று விளையாடாமல் வரிசயாக ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த வீரர்கள் மெஹிடி ஹசன் மிராஸ் 20, நூருல் ஹசன் 29, நயீம் ஹசன் 16 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
சிஎஸ்கே அணியை வழி நடத்த தோனிக்கு கிடைத்த வாய்ப்பு – 212 போட்டிகளில் 128 வெற்றி கொடுத்த கேப்டன்!
இதையடுத்து வந்த தைஜுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்து வருகின்றனர். முதல் நாள் முடிவில் வங்கதேச அணியானது 85 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியில் பந்து வீச்சைப் பொறுத்த வரையில் கிளென் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளும், கைல் ஜேமிசன் மற்றும் அஜாஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இஷ் ஜோதி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
Sri Lanka Cricket Board: விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ரோஷன் ரணசிங்கே அதிரடி நீக்கம்!