அடிச்சதே ஒரு ரன்.. ஆனால் அதுலயும் ஒரு ரெக்கார்டு..! பாபர் அசாம் வேற லெவல்

By karthikeyan VFirst Published Nov 21, 2021, 3:50 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெறும் ஒரு ரன்னே அடித்த பாபர் அசாம், அதிலும் ஒரு சாதனையை படைத்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார் பாகிஸ்தானின் பாபர் அசாம். விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய தலைசிறந்த பேட்ஸ்மேன்களின் வரிசையில் பாபர் அசாமும் மதிப்பிடப்படுகிறார்.

27 வயதான பாபர் அசாம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். பேட்டிங்கில் பல சாதனைகளை இந்த இளம் வயதிலேயே தகர்த்துவருகிறார்.

இதையும் படிங்க - அடக்க முடியாத ஆத்திரம்; ஷாஹீன் அஃப்ரிடி பந்தை விட்டு எறிந்ததில் வலி தாங்க முடியாமல் துடித்த பேட்ஸ்மேன்! வீடியோ

அந்தவகையில், வங்கதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் பாபர் அசாம் ஒரேயொரு ரன் மட்டுமே அடித்த நிலையில், அந்த ஒரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 108 ரன்கள் மட்டுமே அடித்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷாண்டோ 40 ரன்களும், அவருக்கு அடுத்தபடியாக அஃபிஃப் ஹுசைன் 20 ரன்களும் அடித்தனர். 109 ரன்கள் என்ற இலக்கை ஃபகர் ஜமானின் அரைசதத்தின் உதவியுடன் அடித்து பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - IND vs NZ கடைசி டி20: இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

இந்த போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடித்த பாபர் அசாம், அந்த ரன்னுடன் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் 2515 ரன்களை குவித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார் பாபர் அசாம்.

இந்த பட்டியலில் 2514 ரன்களை குவித்துள்ள முகமது ஹஃபீஸ் தான் அதிக டி20 ரன்களை குவித்த பாகிஸ்தான் வீரராக இருந்தார். வங்கதேசத்துக்கு எதிராக ஒரு ரன் அடித்த பாபர் அசாம், 2515 ரன்களை குவித்து, பாகிஸ்தானுக்காக அதிக டி20 ரன்களை குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இதையும் படிங்க - IPL 2022 மெகா ஏலத்தில் அந்த வீரர் ரூ.20 கோடிக்கு மேல் விலை போவார்..! அடித்துக்கூறும் ஆகாஷ் சோப்ரா

பாபர் அசாம் வெறும் 69 போட்டிகளில் 2515 ரன்களை குவித்துள்ளார். இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் முகமது ஹஃபீஸ் 119 போட்டிகளில் 2514 ரன்களை குவித்துள்ளார். 124 டி20 போட்டிகளில் 2423 ரன்களை குவித்துள்ள ஷோயப் மாலிக் இந்த பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார்.
 

click me!