IND vs NZ கடைசி டி20: இந்திய அணியில் அந்த ஒரு மாற்றத்தை செஞ்சே தீரணும்.! கம்பீர் பரிந்துரைக்கும் தரமான மாற்றம்

By karthikeyan VFirst Published Nov 21, 2021, 2:29 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் ஒரு மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் கௌதம் கம்பீர்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு இந்த தொடரிலிருந்தே தயாராக தொடங்கிவிட்ட இந்திய அணியில், இந்த தொடரில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய 2 வீரர்களும் இந்திய அணியில் அறிமுகமாகினர்.

இந்திய அணியில் எடுக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், ஆவேஷ் கான் ஆகியோருக்கு ஆடும் லெவனில் இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடைசி டி20 போட்டியில் இவர்களுக்கு ஆட வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், கடைசி டி20 போட்டியில், ஐபிஎல் 14வது சீசனில் அபாரமாக பந்துவீசி அசத்திய ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், பவுலிங்கை பொறுத்தமட்டில் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வளித்துவிட்டு, ஆவேஷ் கானை சேர்க்கலாம். நல்ல வேகமும் பவுன்ஸும் கொண்ட கொல்கத்தா பிட்ச் ஆவேஷ் கானுக்கு பொருத்தமாக இருக்கும். எனவே கடைசி டி20 போட்டியில் ஆவேஷ் கானை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும். டி20 தொடரை ஏற்கனவே வென்றுவிட்ட நிலையில், நல்ல வேகத்தில் வீசக்கூடிய ஆவேஷ் கானை சர்வதேச கிரிக்கெட்டில் பரிசோதிக்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

3வது டி20 போட்டிக்கான கௌதம் கம்பீரின் இந்திய ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.
 

ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக அபாரமாக பந்துவீசிய ஆவேஷ் கான், 14வது சீசனில் 16 போட்டிகளில் ஆடி 7.37 என்ற எகானமி ரேட்டுடன் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!