அடக்க முடியாத ஆத்திரம்; ஷாஹீன் அஃப்ரிடி பந்தை விட்டு எறிந்ததில் வலி தாங்க முடியாமல் துடித்த பேட்ஸ்மேன்! வீடியோ

Published : Nov 21, 2021, 03:14 PM IST
அடக்க முடியாத ஆத்திரம்; ஷாஹீன் அஃப்ரிடி பந்தை விட்டு எறிந்ததில் வலி தாங்க முடியாமல் துடித்த பேட்ஸ்மேன்! வீடியோ

சுருக்கம்

வங்கதேச வீரர் அஃபிஃப் ஹுசைன் தனது பந்தில் சிக்ஸ் அடித்த கடுப்பில், ஷாஹீன் அஃப்ரிடி பந்தை வேண்டுமென்றே அஃபிஃப் ஹுசைன் மீது விட்டு எறிந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை வென்றுவிட்டது.

இந்த தொடரின் 2வது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 108 ரன்கள் மட்டுமே அடித்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷாண்டோ 40 ரன்களும், அவருக்கு அடுத்தபடியாக அஃபிஃப் ஹுசைன் 20 ரன்களும் அடித்தனர். 109 ரன்கள் என்ற இலக்கை ஃபகர் ஜமானின் அரைசதத்தின் உதவியுடன் அடித்து பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வங்கதேச அணியின் பேட்டிங்கின்போது, அந்த இன்னிங்ஸின் 3வது ஓவரை வீசினார் ஷாஹீன் அஃப்ரிடி. அந்த ஓவரின் 2வது பந்தில் வங்கதேச வீரர் அஃபிஃப் ஹுசைன் சிக்ஸர் அடித்தார். அந்த கடுப்பில் இருந்த ஷாஹீன் அஃப்ரிடி, 3வது பந்தை அஃபிஃப் ஹுசைன் தடுப்பாட்டம் ஆட, அந்த பந்தை பிடித்த ஷாஹீன் அஃப்ரிடி பந்தை வேண்டுமென்றே வேகமாக அஃபிஃப் ஹுசைனை நோக்கி எறிந்தார். ஷாஹீன் அஃப்ரிடி விட்டெறிந்த பந்தில் அடி வாங்கிய அஃபிஃப் ஹுசைன் சுருண்டு விழுந்து வலியால் துடித்தார். 

இதையடுத்து தனது தவறை உணர்ந்த ஷாஹீன் அஃப்ரிடி, அஃபிஃப் ஹுசைனை எழுப்பிவிட்டு, அவரிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனாலும் கோபத்தில் ஷாஹீன் அஃப்ரிடியின் நிதானமற்ற செயல் ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?