திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பா11சி திருச்சி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் கோயம்புத்தூரில் தொடங்கியது. இதில், முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று 2ஆவது போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.
இதில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று பிற்பகலில் நடந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது நடக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பா11சி திருச்சி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி:
பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), எஸ் அருண், பூபதி குமார், விமல் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), ஷிவம் சிங், பி சரவணக் குமார், எம் மதிவாணன், வருண் சக்கரவர்த்தி, சி சரத் குமார், சுபோத் பதி.
லங்கா பிரீமியர் லீக் தொடரில் தனது பெயரை பதிவு செய்த சுரேஷ் ரெய்னா!
பா11சி திருச்சி:
கங்கா ஸ்ரீதர் ராஜூ (கேப்டன்), ஜாஃபர் ஜமால், தரில் பெர்ராரிரோ, அக்ஷய் ஸ்ரீநிவாசன், மணி பாரதி (விக்கெட் கீப்பர்), ஆண்டனி தாஸ், எம் ஷாஜஹான், ஆர் ராஜ்குமார், ஆர் சிலம்பரசன், ஆர் அலெக்ஸாண்டர், டி நடராஜன்.
களத்தில் இறங்கும் வாஷிங்டன் சுந்தர்: சீகேம் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதிப் போட்டியில் இடம் பெறும் 2 அணிகளுக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Action awaits!💥🤩🏏💥💪🏼 pic.twitter.com/umtPKYV6N2
— TNPL (@TNPremierLeague)