IND vs AUS: கடைசி நேர ட்விஸ்ட்.. ஆஸி., அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் மாற்றம்! அந்த 2 பேரில் யாருக்கு இடம்?

By karthikeyan VFirst Published Feb 7, 2023, 7:03 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆடுவது சந்தேகமாகியிருப்பதால், ஆஸ்திரேலிய அணி ஆடும் லெவன் காம்பினேஷனில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும் நிலையில், அந்த அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் மிக முக்கியமான தொடர். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் முக்கியமான தொடர் இதுவென்பதால் இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற இந்த தொடரில் 2 அல்லது 3 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் வெற்றி கட்டாயத்தில்  ஆடுகிறது இந்திய அணி.

இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் தீவிரமாக தயாராகிவரும் ஆஸ்திரேலிய அணி, ஸ்பின் யூனிட்டையும் வலுப்படுத்தியுள்ளது. எனவே இந்த தொடர் கடும் போட்டியாக இருக்கும். வரும் 9ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்கும் நிலையில், இந்த போட்டியிலிருந்து காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் ஏற்கனவே விலகிய நிலையில், இப்போது கேமரூன் க்ரீனும் விலகியுள்ளார். 

IND vs AUS: டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே அஷ்வினை நினைத்து அலறும் ஆஸி., தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் கைவிரலில் காயமடைந்த கேமரூன் க்ரீன் இன்னும் அந்த காயத்திலிருந்து முழுமையாக மீளவில்லை. விதர்பா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், அந்த பயிற்சியில் பேட்டிங், பவுலிங் பயிற்சி செய்யாமல் கேமரூன் க்ரீன் ஃபிட்னெஸ் டிரெய்னிங் எடுத்துவருகிறார். அவர் காயம் காரணமாக நாக்பூரில் நடக்கும் முதல் டெஸ்ட்டில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. 

ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீன் ஆடாதது ஆஸ்திரேலிய அணியின் பேலன்ஸை பாதிக்கும். ஆஸ்திரேலிய அணி, ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீன் இடத்தில் ஒரு பேட்ஸ்மேனை ஆடவைக்க நேரிடும். எனவே 7 பேட்ஸ்மேன்கள் - 4 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் ஆடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கேமரூன் க்ரீன் ஆடினால் 5வது பவுலிங் ஆப்சனாக இருந்திருப்பார். 

ஆனால் அவர் ஆடாததால் அவரது இடத்தில் மேட் ரென்ஷா அல்லது பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார் என்று தெரிகிறது. பேட்ஸ்மேன்கள் - உஸ்மான் கவாஜா, வார்னர், லபுஷேன், ஸ்மித், டிராவிஸ் ஹெட், ஹேண்ட்ஸ்கோம்ப்/ரென்ஷா. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி. ஸ்பின்னர்களாக நேதன் லயன் மற்றும் அஷ்டான் அகர் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் ஆடுவார்கள்.

ODI உலக கோப்பையில் ஆட இந்தியாவுக்கு வரமாட்டாங்களா..? பாகிஸ்தான் சும்மா வாய் உதார் தான்.. அஷ்வின் அதிரடி

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர்,  மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்/மேட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன்.
 

click me!