IND vs AUS: முதல் டெஸ்ட்டில் ஆடாத ஆல்ரவுண்டர்.. ஆஸி., அணிக்கு மரண அடி.. ஆடும் லெவனை தேர்வு செய்வதில் சிக்கல்

By karthikeyan VFirst Published Feb 7, 2023, 6:03 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிராக நாக்பூரில் நடக்கும் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் காயம் காரணமாக ஆடவில்லை. அவர் ஆடாதது ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்வதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் மிக முக்கியமான தொடர். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் முக்கியமான தொடர் இதுவென்பதால் இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 2004ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிராத ஆஸ்திரேலிய அணி 19 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. 

IND vs AUS: டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே அஷ்வினை நினைத்து அலறும் ஆஸி., தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற வேண்டுமென்றால், இந்த டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்திய அணி இந்த தொடரை வெல்வதில் உறுதியாக உள்ளது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் தீவிரமாக தயாராகிவரும் ஆஸ்திரேலிய அணி, ஸ்பின் யூனிட்டையும் வலுப்படுத்தியுள்ளது. எனவே இந்த தொடர் கடும் போட்டியாக இருக்கும்.

வரும் 9ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்கும் நிலையில், இந்த போட்டியிலிருந்து காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் ஏற்கனவே விலகிய நிலையில், இப்போது கேமரூன் க்ரீனும் விலகியுள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் கைவிரலில் காயமடைந்த கேமரூன் க்ரீன் இன்னும் அந்த காயத்திலிருந்து முழுமையாக மீளவில்லை. விதர்பா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், அந்த பயிற்சியில் பேட்டிங், பவுலிங் பயிற்சி செய்யாமல் கேமரூன் க்ரீன் ஃபிட்னெஸ் டிரெய்னிங் எடுத்துவருகிறார். அவரது காயம் காரணமாக அவர் முதல் டெஸ்ட்டில் ஆடமாட்டார் என்பதை அந்த அணியின் துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ODI உலக கோப்பையில் ஆட இந்தியாவுக்கு வரமாட்டாங்களா..? பாகிஸ்தான் சும்மா வாய் உதார் தான்.. அஷ்வின் அதிரடி

ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீன் ஆடாததால் ஆஸ்திரேலிய அணி அவரது இடத்தில் ஒரு பேட்ஸ்மேனை ஆடவைக்க நேரிடும். எனவே 7 பேட்ஸ்மேன்கள் - 4 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் ஆடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கேமரூன் க்ரீன் ஆடினால் 5வது பவுலிங் ஆப்சனாக இருந்திருப்பார். க்ரீன் ஆடாதது ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்வதில் ஆஸ்திரேலிய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!