SL vs AUS: 20 வருஷத்துல டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் அதிவேக வெற்றி..! இலங்கை மண்ணில் தரமான சாதனை

By karthikeyan VFirst Published Jul 1, 2022, 4:30 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 3ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனிலேயே முடித்து, கடந்த 20 வருடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி அதன் அதிவேக வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
 

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை இலங்கை அணியும் வென்றன. அதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது.

முதல் டெஸ்ட்  போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 212 ரன்கள் மட்டுமே அடித்தது. டிக்வெல்லா மட்டுமே அரைசதம்(58) அடித்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் நேதன் லயன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையும் படிங்க - ENG vs IND: ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு..!

முதல் நாளிலிருந்தே கல்லே ஆடுகளம் ஸ்பின்னிற்கு ஒத்துழைப்பு வழங்கியது. முதல் நாளிலிருந்தே பந்து நன்றாக திரும்பியதால் அதை ஆஸ்திரேலிய அணியும் நேதன் லயனும் நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, கேமரூன் க்ரீன்(77) மற்றும் உஸ்மான் கவாஜா(71) ஆகிய இருவரின் பொறுப்பான அரைசதங்கள் மற்றும் மற்ற வீரர்களின் பங்களிப்புகளால் முதல் இன்னிங்ஸில் 321 ரன்கள் அடித்தது.

109 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 2வது இன்னிங்ஸில் வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நேதன் லயன் மற்றும் ஹெட் அதிகபட்சமாக தலா 4 விக்கெட்டுகளையும், ஸ்வெப்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல

எனவே மொத்தமாகவே வெறும் 4 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது இலங்கை அணி. 5 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து நான்கே பந்தில் முடித்துவிட்டார். 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

கல்லே ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியை 3ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனிலேயே முடித்து அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி கடந்த 20 ஆண்டுகளில் பெற்ற அதிவேக வெற்றி.

இதையும் படிங்க - இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் புதிய கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமனம்

பாட் கம்மின்ஸின் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் வெற்றிகளை பெற்று வருவதுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது அதிவேக வெற்றியை பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது.
 

click me!