இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கி நடக்கிறது.
இந்த தொடரில் ஏற்கனவே 2-1 என முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 3-1 என தொடரை வெல்வதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் கூடுதல் வெற்றி சதவிகிதத்தை பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று 2-2 என தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது.
இதையும் படிங்க - SL vs AUS: முதல் டெஸ்ட்டில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
ரோஹித் சர்மாவுக்கு கொரோனா என்பதால் அவர் இந்த போட்டியில் ஆடவில்லை. எனவே ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்சி செய்கிறார். எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஷுப்மன் கில்லுடன் புஜாரா தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டுள்ளார். 3ம் வரிசையில் ஹனுமா விஹாரி ஆடுகிறார். 4ம் வரிசையில் கோலி, 5ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுகின்றனர்.
இதையும் படிங்க - ENG vs IND: ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு..!
இந்திய அணி:
ஷுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்).
இங்கிலாந்து அணி:
அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), மேட்டி பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.