SL vs AUS: முதல் டெஸ்ட்டில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

By karthikeyan V  |  First Published Jul 1, 2022, 2:31 PM IST

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 


இலங்கை - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்:

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை இலங்கை அணியும் வென்றன. அதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க - ENG vs IND: ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு..!

முதல் இன்னிங்ஸ்:

முதல் டெஸ்ட்  போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 212 ரன்கள் மட்டுமே அடித்தது. டிக்வெல்லா மட்டுமே அரைசதம்(58) அடித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, கேமரூன் க்ரீன்(77) மற்றும் உஸ்மான் கவாஜா(71) ஆகிய இருவரின் பொறுப்பான அரைசதங்கள் மற்றும் மற்ற வீரர்களின் பங்களிப்புகளால் முதல் இன்னிங்ஸில் 321 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க - இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் புதிய கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமனம்

ஆஸ்திரேலியா அபார வெற்றி:

109 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 2வது இன்னிங்ஸில் வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நேதன் லயன் மற்றும் ஹெட் அதிகபட்சமாக தலா 4 விக்கெட்டுகளையும், ஸ்வெப்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க - ENG vs IND: அவனுங்க எப்படி ஆடுனா எங்களுக்கென்ன.? அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல - செம கெத்தா பேசிய ராகுல் டிராவிட்

எனவே மொத்தமாகவே வெறும் 4 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது இலங்கை அணி. 5 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து நான்கே பந்தில் முடித்துவிட்டார். 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
 

click me!