ENG vs IND: பும்ராவிற்கு பதில் அவரைத்தான் கேப்டனாக நியமித்திருக்கணும்..! முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான் கருத்து

By karthikeyan VFirst Published Jul 1, 2022, 3:42 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கேப்டனாக பும்ராவிற்கு பதிலாக புஜாராவை நியமித்திருக்கலாம் என்று வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:

இங்கிலாந்து - இந்தியா இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டனில் தொடங்கி நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

ரோஹித்துக்கு கொரோனா; பும்ரா கேப்டன்:

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா என்பதால் இந்த போட்டியில் அவர் ஆடவில்லை. அதனால் துணை கேப்டனான ஜஸ்ப்ரித் பும்ரா இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

இதையும் படிங்க - ENG vs IND: ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு..!

வாசிம் ஜாஃபர் கருத்து:

ஆனால் கேப்டன்சி அனுபவமில்லாத பும்ராவிற்கு பதிலாக, 95 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவமிக்க வீரரும், முதல் தர கிரிக்கெட்டில் கேப்டன்சி அனுபவம் கொண்டவருமான புஜாராவைத்தான் கேப்டனாக நியமித்திருக்க வேண்டும் என்று வாசிம் ஜாஃபர் கருத்து கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய வாசிம் ஜாஃபர், புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் கேப்டன்சி செய்து நான் பார்த்திருக்கிறேன். அவர் நல்ல கேப்டன். 95 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். எனவே அவரை கேப்டனாக நியமிப்பதுதான் சரியாக இருந்திருக்கும். 

இதையும் படிங்க - SL vs AUS: முதல் டெஸ்ட்டில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

பும்ரா துணை கேப்டன் என்ற முறையில் ரோஹித் சர்மா இல்லாதபட்சத்தில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இந்த போட்டியின் முக்கியத்துவம் கருதி புஜாராவை கேப்டனாக நியமித்திருக்கலாம். பும்ரா இதுவரை கேப்டன்சி செய்ததில்லை. கேப்டன்சி அனுபவமே இல்லாமல், நேரடியாக ஒரு பெரிய டெஸ்ட் போட்டியில் கேப்டன்சி செய்யவுள்ளார். பும்ரா புத்திக்கூர்மையான வீரர். அந்தவகையில், ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் சர்ப்ரைஸ் செய்ததுபோல் பும்ராவும் சர்ப்ரைஸ் செய்யலாம் என்று வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார்.
 

click me!