இந்தியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் முதல் வீரராக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்து தவறான முடிவு எடுத்துள்ளார். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் எந்த அணி டாஸ் ஜெயிக்கிறதோ, அந்த அணி முதலில் பேட்டிங் ஆடுவது தான் சிறந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
கூல்டிரிங்ஸ் கொண்டு வந்து கொடுத்து ரோகித் சர்மாவுக்கு டிப்ஸ் கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஒருபுறம் அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 8 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதையடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 26 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய பவுலர்களை கிறங்க வைத்தனர். தொடர்ந்து பவுண்டரியாக விளாசித் தள்ளினர்.
அவுட் ஆவுடா: ரசிகர்களால் கூட தாங்க முடியவில்லை! வைரலாகும் போஸ்டர்: ஆஸி, 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்!
ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் இணைந்து 251 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் தனது 6ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு வெளியில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். அதோடு, இந்தியாவிற்கு எதிராகவும் தனது முதல் சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றிவிட்ட டீம் இந்தியா: என்ன காரணம் தெரியுமா?
இவ்வளவு ஏன், முதல் ஆஸ்திரேலிய வீரராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்திருக்கிறார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 327 ரன்கள் குவித்துள்ளது. இதில் ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில் 95 ரன்னும், டிராவிஸ் ஹெட் 156 பந்துகளில் 22 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 146 ரன்கள் எடுத்து இருவரும் விளையாடி வருகின்றனர்.