இந்தியாவின் சாதனையை முறியடிக்க ஆஸ்திரேலியா திட்டம்: சென்னை சேப்பாக்கம் யாருக்கு சாதகம்?

By Rsiva kumar  |  First Published Mar 22, 2023, 11:16 AM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டியில் போட்டியின் போது நடு நடுவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஹர்ஷா போக்லே, ரவி சாஸ்திரி கூட கிடையாது: ஐபிஎல் வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த 65 பிரபலங்கள் யார் யார்?

Tap to resize

Latest Videos

வெற்றியை தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் கோப்பையை கைப்பற்றும். அப்படியில்லாமல் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் கோப்பையை கைப்பற்றுவதோடு, ஐசிசி ஆண்கள் ODI அணிகளின் தரவரிசையில் முதலிடம் பிடித்து நம்பர் 1 அணியாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சேப்பாக்கம் சுழற்பந்து வீச்சுக்கு சாதக்மான மைதானம் என்பதால், இந்திய அணியில் அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. அப்படியில்லை என்றால், குல்தீப் யாதவ்விற்குப் பதிலாக வாஷிங்டர் சுந்தர் இடம் பெறவும் வாய்ப்பு உண்டு. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 250 ரன்களும் அதற்கு மேலும் அடிக்க வாய்ப்பிருபபதாக கூறப்படுகிறது.

IND vs AUS Chennai 3rd ODI: போட்டிக்கு நடு நடுவில் மழை பெய்ய வாய்ப்பு - போட்டியில் பாதிப்பு வருமா?

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு சென்னையில்  4 ஒருநாள் போட்டி தான் நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி 2 போட்டியில் வெற்றியும், தோல்வியும் அடைந்திருக்கிறது. கடந்த 1987 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு ரன்னில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டியின் போது மழை குறுக்கீடு இருந்த நிலையில், இந்தப் போட்டியில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில், குல்தீப், சாஹல் ஜோடி இணைந்து 9 ஓவர் வீசி 5 விக்கெட்டுகளை எடுத்தது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சமீபத்திய ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மைதானத்தில் 9 முறை சுழற்பந்து வீச்சாளர்கள் தான் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறனர். ஒரு முறை வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியிருக்கின்றனர். அணில் கும்பளே 48 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 42 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். இங்கு நடந்த 35 ஒரு நாள் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 15 முறையும், 2 ஆவது பேட்டிங் செய்த அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

நாளை ஒரு நாள் மட்டும், கிரிக்கெட் பார்க்க ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி!

இந்த மைதானத்தின் அதிகபட்ச ஸ்கோர் 337/7, குறைந்தபட்ச ஸ்கோர் 69/10 என்பது ஆகும். அதிகபட்ச ரன் சேஸ் 291/2, குறைந்தபட்ச ரன் சேஸ் 171/10 ஆகும். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 15 ஒரு நாள் தொடர்களில் விளையாடிய இந்திய அணி 13 ஒருநாள் தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இந்த சாதனையை ஆஸ்திரேலியா முறியடிக்க தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டீமில் இடமில்லை, டிவி பக்கமாக சென்று போலீஸ் அதிகாரியாக ரவுடிகளை அடித்து விரட்டும் ஷிகர் தவான்!

click me!