இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி ஒன்று திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், ஆஸ்திரேலியா அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி 201 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்து லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்ட கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இதே போன்று ஆடம் ஜம்பாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களுக்குப் பதிலாக, ஜேசன் பெஹ்ரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்ஷர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா:
ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), சீன் அபாட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா.
IPL Retention 2024: மணீஷ் பாண்டே, முஷ்தாபிஜூர் ரஹ்மான் உள்பட 11 வீரர்களை விடுவித்த டெல்லி கேபிடல்ஸ்!