தமிழக வீரரை விடுவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் – 9 வீரர்களை விடுவித்து 14.5 கோடியை ஏலத்திற்கு வைத்துக் கொண்ட RR!

ராஜஸ்தான ராயல்ஸ் அணியிலிருந்து தமிழக வீரரான முருகன் அஸ்வின் உள்பட 9 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


ஐபிஎல் 2024 தொடரானது வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. 2024 ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீர்ரகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு அணியும் பட்டியலை வெளியிட்ட நிலையில் ஐபிஎல் நிர்வாகத்தின் மூலமாக இறுதி பட்டியல் வெளியிடபட்டு வருகிறது.

IPL Retention 2024: மணீஷ் பாண்டே, முஷ்தாபிஜூர் ரஹ்மான் உள்பட 11 வீரர்களை விடுவித்த டெல்லி கேபிடல்ஸ்!

Latest Videos

அதன்படி முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ராஜஸ்தன் ராயல்ஸ் அணியின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ஜோ ரூட் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார். ஜேசன் ஹோல்டர், தமிழக வீரர் முருகன் அஸ்வின் உள்பட 9 வீரர்களை ராஜஸ்தா ராயல்ஸ் விடுவித்து ரூ.14.5 கோடியை ஏலத்திற்கு வைத்துக் கொண்டது.

பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், ஜேமிசன் உள்ளிட்ட 8 வீரர்களை விடுவித்த சிஎஸ்கே – சென்னைக்கு கிடைத்த ரூ.32.1 கோடி!

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

ஆல் ரவுண்டர்கள்:

ஜேசன் ஹோல்டர் – ரூ.5.75 கோடி

ஆகாஷ் வஷிஸ்ட் – ரூ. 20 லட்சம்

அப்துல் பசித் – ரூ.20 லட்சம்

பேட்ஸ்மேன்:

ஜோ ரூட் – ரூ. 1 கோடி

பந்து வீச்சாளர்கள்:

குல்டிப் யாதவ் – ரூ.20 லட்சம்

ஓபெட் மெக்காய் – ரூ.75 லட்சம்

முருகன் அஸ்வின் – ரூ.20 லட்சம்

கேசி கரியப்பா – ரூ.30 லட்சம்

கேஎம் ஆசிஃப் - ரூ. 30 லட்சம்

 

Rajasthan Royals retained & released players list. [Star Sports] pic.twitter.com/cERcjXRLtg

— Johns. (@CricCrazyJohns)

 

click me!