
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024 ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். அதற்கு இன்று 26ஆம் தேதி மாலை 4 மணி வரை தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது.
IPL Retention 2024: ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைனை தக்க வைத்துக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
இந்த நிலையில் தான் ஐபிஎல் நிர்வாகம் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று கூறப்பட்டது. அதன்படி தற்போது ஒவ்வொரு அணியாக வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. முதலாவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிட்டப்பட்டது. இதில், சென்னை அணியானது 8 வீரர்களை வெளியிட்டது.
ஒருவரை காப்பற்றியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் – பள்ளத்தில் கவிழ்ந்த கார், உதவி செய்த முகமது ஷமி!
சென்னை சூப்பர் கிங்ஸ் – விடுவிக்கப்பட்ட வீரர்கள் (8):
ஆல் ரவுண்டர்கள்:
பென் ஸ்டோக்ஸ் – ரூ.16.25 கோடி
டுவைன் பிரிட்டோரியஸ் – ரூ.50 லட்சம்
பகத் வர்மா – ரூ.20 லட்சம்
சுப்ரான்சு சேனாபதி - ரூ.20 லட்சம்
கேல் ஜேமிசன் – ரூ.1 கோடி
பேட்ஸ்மேன்:
அம்பத்தி ராயுடு (ஓய்வு) – ரூ.6.7 கோடி
பவுலர்கள்:
சிசாண்டா மகாலா – ரூ.50 லட்சம்
ஆகாஷ் சிங் – ரூ.20 லட்சம்
இந்த வீரர்களை விடுவித்ததன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலத் தொகையாக ரூ.32.1 கோடி கிடைத்துள்ளது.