கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024 ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். அதற்கு இன்று 26ஆம் தேதி மாலை 4 மணி வரை தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது.
ஒருவரை காப்பற்றியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் – பள்ளத்தில் கவிழ்ந்த கார், உதவி செய்த முகமது ஷமி!
இதையடுத்து, ஐபிஎல் நிர்வாகம் இறுதி செய்யப்பட்ட தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிடும். இந்த நிலையில் 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஆண்ட்ரே ரஸல் மற்றும் சுனில் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிம் சவுதி, ஷர்துல் தாக்கூர் மற்றும் லாக்கி ஃபெர்குசன் ஆகியோரை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக இருந்த கவுதம் காம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் இருவரும் ஐபிஎல் 2023 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
KKR has retained Russell & Narine for IPL 2024. [Cricbuzz] pic.twitter.com/HOiPRAYBea
— Johns. (@CricCrazyJohns)