19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் இந்த தொடரில் இந்தியா தான் அதிக முறை டிராபியை வென்றுள்ளது. இதுவரையில் நடந்த 9 தொடர்களில் இந்தியா 8 முறையும், ஆப்கானிஸ்தான் ஒரு முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன.
தற்போது 10ஆவது சீசனுக்கான 19வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரானது வரும் டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாள், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய 8 அணிகள் குரூப் ஏ மற்றும் பி என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாட உள்ளன. இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டி 1 மற்றும் அரையிறுதிப் போட்டி 2 என்று மோதும்.
இதில், வெற்றி பெறும் 2 அணிகளும் இறுதிப் போட்டியில் மோதும். இந்த நிலையில் தான் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக பஞ்சாபை சேர்ந்த உதய் சஹாரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், துணை கேப்டனாக மத்தியப்பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சௌமி குமார் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
இது என்ன எக்ஸேஞ்ச் ஆஃபரா? ஹர்திக் பாண்டியாவை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ்!
விக்கெட் கீப்பர் பொறுப்பானது, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆரவெல்லி அவனிஷ் ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூனியர் கிரிக்கெட் கமிட்டி 2023 ஆம் ஆண்டு UAE இல் நடைபெறவுள்ள ACC ஆண்கள் U19 ஆசிய கோப்பை 2023க்கான இந்தியாவின் U19 அணியை தேர்வு செய்துள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா 8 முறை டிராபியை வென்ற அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
Cricket World Cup 2027: இவர்களுக்கு எல்லாம் வயசாயிடுச்சு – 2027 உலகக் கோப்பைக்குள் ரிட்டயர்டா?
மேலும், இந்தியாவின் U19 அணியில் 15 உறுப்பினர்கள் மற்றும் 3 ஸ்டாண்ட் பை வீரர்களும் உள்ளனர். தேர்வுக் குழு 4 கூடுதல் ரிசர்வ் வீரர்களையும் பெயரிட்டுள்ளது. ரிசர்வ் வீரர்கள் சுற்றுப்பயணக் குழுவின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை மீது கால் வைத்த மிட்செல் மார்ஷ் மீது எஃப்ஐஆர் – கிரிக்கெட் விளையாட தடை?
ஆசியக் கோப்பைக்கான அண்டர்19 (யு19) இந்திய அணி:
உதய் சஹாரன் (கேப்டன்), சௌமி குமார் பாண்டே (துணைக் கேப்டன்), ஆரவெல்லே அவனீஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ர மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, முஷீர் கான், முருகன் அபிஷேக், இன்னேஸ் மஹாஜன், தனுஷ் கௌடா, ஆரதயா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.
ஸ்டாண்ட்பை பிளேயர்ஸ் – பிரேம் தேவ்கர், அன்ஷ் கோஷை, முகமது அமான்
ரிசர்வ் பிளேயர்ஸ் – திக்விஜய் பாட்டீல், ஜெயந்த் கோயத், பி விக்னேஷ், கிரண் சோர்மலே
இந்தியா மோதும் போட்டி அட்டவணை:
டிசம்பர் 7 - இந்தியா யு19 - ஆப்கானிஸ்தான் யு19
டிசம்பர் 9 - இந்தியா யு19 - பாகிஸ்தான் யு19
டிசம்பர் 12 - இந்தியா யு19 - நேபாள் யு19
🚨 NEWS 🚨
India U19 squad for ACC Men’s U19 Asia Cup announced
Details 🔽https://t.co/dZHCSv32a6