வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் 43ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 43 ஆவது லீக் போட்டி இன்று நடக்கிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியா அணியின் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார் ஆகியோருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சீன் அபாட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை – டி20 உலகக் கோப்பை சிக்ஸர் குறித்து மனம் திறந்த கோலி!
ஷாகிப் அல் ஹசன் உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், அவருக்குப் பதிலாக நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். ஷாகிப் அல் ஹசனுக்குப் பதிலாக இந்தப் போட்டியில் மஹதி ஹசன் அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானை சிறந்த அணியாக உலகிற்கு காட்டிவிட்டு செல்கிறோம் – ஹஷ்மதுல்லா ஷாகிடி!
வங்கதேசம்:
தன்ஷித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (கேப்டன்), மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தவ்ஹித் ஹ்ரிடோய், மெஹிடி ஹசன் மிராஸ், மஹதி ஷசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஷ்பிஜூர் ரஹ்மான்
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அபாட், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசல்வுட்
பும்ரா ஏன் சிறந்த பவுலர் தெரியுமா? 383 பந்துகளில் 268 பந்துகள் ரன்னே கொடுக்கவில்லை!