அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை – டி20 உலகக் கோப்பை சிக்ஸர் குறித்து மனம் திறந்த கோலி!

By Rsiva kumar  |  First Published Nov 11, 2023, 9:46 AM IST

2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசிய கோலி அந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.


இந்தியா நடத்தும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதையடுத்து வரும் 2024ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட் சேனலுக்கு விராட் கோலி அளித்த பேட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தான் விளையாடிய விதம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்தப் போட்டியில் அடுத்தடுத்து சிக்ஸர் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

ஆப்கானிஸ்தானை சிறந்த அணியாக உலகிற்கு காட்டிவிட்டு செல்கிறோம் – ஹஷ்மதுல்லா ஷாகிடி!

Tap to resize

Latest Videos

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த 16ஆவது லீக் போட்டியில் இந்திய அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்தப் போட்டியில் கடைசி வரை நின்று விளையாடிய விராட் கோலி 53 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், இந்திய அணியின் வெற்றிக்கும் வித்திட்டார். இந்தப் போட்டியில் ஹரீஷ் ராஃப் வீசிய 18.5ஆவது ஓவரிலும், 18.6ஆவது ஓவரிலும் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசி அசத்தினார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஐசிசி நூற்றாண்டின் சிறந்த ஷாட் என்று குறிப்பிட்டிருந்தது.

பும்ரா ஏன் சிறந்த பவுலர் தெரியுமா? 383 பந்துகளில் 268 பந்துகள் ரன்னே கொடுக்கவில்லை!

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அந்த ஷாட்டை தன்னால் மறக்க முடியாது. ஆனால், அந்து எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. விளையாட்டில் அதிக பவர் இருக்கும். அதனை ஒரு கணத்தில் புரிந்து கொள்வீர்கள். யாரேனும் என்னிடம் வந்து 10 வயதிலோ, 35 வயதிலோ நான் இங்கே இருப்பேன் என்று சொன்னால், என்ன நடக்கப் போகிறது, என்ன நடக்கும் என்று எழுதி கையெழுத்திட்டால் நான் அவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்திருப்பேன்.

ஆப்கானிஸ்தான் வெளியேறிவிட்டது; பாகிஸ்தானுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு: அரையிறுதிக்கு முன்னேறுமா?

எனது 25 வருட பயணம் என்னவாக இருக்கும், அது இங்கே வந்தது என்று தெரிந்தால், அது ஒரு பெரிய தொகுப்பு. என்ன நடக்கப் போகிறது, எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அது இப்போதுதான் நடந்தது; என்னால் இங்கே உட்கார்ந்து அதைக் கோர முடியாது. அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.  அதனால்தான் பார்த்தவர்கள் அதையே உணர்ந்தார்கள். அது யாரோ சொன்னது போலவோ, உரிமை கொண்டாடுவது போலவோ இல்லை, அந்தத் தருணத்தில் அது சிறந்ததாக இருந்தது, எல்லோரும் உணர்ந்தார்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வான் டெர் டுசென், ஆண்டிலேயால் தென் ஆப்பிரிக்கா சிம்பிள் வெற்றி – பரிதாபமாக வெளியேறிய ஆப்கானிஸ்தான்!

 

Diwali night in Melbourne and were in a dark place against Pakistan... until ignite belief in a billion hearts!

Do not miss the final part of this incredible story!

Tune-in to : Part 2
SUN, NOV 12, 10 PM onwards | Star Sports Network pic.twitter.com/CvCWieAy8x

— Star Sports (@StarSportsIndia)

 

click me!