ICC WTC புள்ளி பட்டியலில் டாப்பில் இருக்கும் ஆஸி., - தென்னாப்பிரிக்கா மோதல்! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published Dec 16, 2022, 4:33 PM IST

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஃபைனலுக்கு முன்பாக முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் தான் ஃபைனலில் மோதும். அந்தவகையில், நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா அணி 2ம் இடத்திலும் உள்ளன.

ஆஸ்திரேலிய அணி 75 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 60 சதவிகிதத்துடன் 2ம் இடத்திலும் உள்ளன. 52.08 சதவிகிதத்துடன் 4ம் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு 2ம் இடத்தை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இந்திய அணி வங்கதேசம் மற்றும் அடுத்ததாக நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் ஃபைனலுக்கு முன்னேறலாம்.

Tap to resize

Latest Videos

2வது இன்னிங்ஸில் கில், புஜாரா சதம்.. வங்கதேசத்திற்கு மெகா இலக்கை நிர்ணயித்து வெற்றியை உறுதி செய்த இந்தியா

அதேவேளையில், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவிடம் தோற்றால் 2ம் இடத்தை இழந்துவிடும். எனவே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முக்கியமான தொடர் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர்.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 17) பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். பிரிஸ்பேனை பொறுத்தமட்டில், அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது மிகக்கடினம். ஆனால் இந்திய அணி பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தியிருக்கிறது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரும் தொடக்க வீரர்கள். அதன்பின்னர் வழக்கமான பேட்டிங் ஆர்டர் தான் - லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி. ஃபாஸ்ட் பவுலர்களாக கேப்டன் கம்மின்ஸுடன் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலந்த் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஸ்பின்னர் நேதன் லயன்.

எப்போ எப்படி ஆடணும்னு கோலிக்கு தெரியும்.. அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்..! ராகுல் டிராவிட் புகழாரம்

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மன் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலந்த்.

உத்தேச தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர் (கேப்டன்), சாரெல் எர்வீ, ராசி வாண்டர் டசன், டெம்பா பவுமா, டி ப்ருய்ன், கைல் வெரெய்ன், மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.
 

click me!