BBL: ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பவுலிங்கை அடித்து நொறுக்கி ஜோ கிளார்க் சதம்..! மெல்பர்ன் ஸ்டார்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Dec 16, 2022, 3:36 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான போட்டியில் ஜோ கிளார்க் அபார சதமடிக்க, 20 ஓவரில் 183 ரன்களை குவித்த மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி, ஹோபர்ட் அணியை 145 ரன்களுக்கு சுருட்டி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மெல்பர்ன் ஸ்டார்ஸ் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மெல்பர்னில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி:

ஜோ கிளார்க் (விக்கெட் கீப்பர்), தாமஸ் ரோஜர்ஸ், நிக் லார்கின், மார்கஸ் ஸ்டோய்னிஸ், வெப்ஸ்டெர், ஹில்டன் கார்ட்ரைட், கேம்ப்பெல் கெலாவே, லுக் உட், நேதன் குல்ட்டர்நைல், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா (கேப்டன்).

எப்போ எப்படி ஆடணும்னு கோலிக்கு தெரியும்.. அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்..! ராகுல் டிராவிட் புகழாரம்

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி:

டார்ஷி ஷார்ட், பென் மெக்டெர்மோட், மேத்யூ வேட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், டிம் டேவிட், ஆசிஃப் அலி, ஜேம்ஸ் நீஷம், ஜோயல் பாரிஸ், நேதன் எல்லிஸ், பாட்ரிக் டூலி, ரைலீ மெரிடித்.

முதலில் பேட்டிங் ஆடிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஒருமுனையில் தாமஸ் ரோஜர்ஸ்(20), வெப்ஸ்டெர்(24), ஸ்டோய்னிஸ்(0), கார்ட்ரைட்(17) ஆகியோர் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய தொடக்க வீரர் ஜோ கிளார்க் சதமடித்தார். ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பவுலர்களான மெரிடித், ஜோயல் பாரிஸ், நேதன் எல்லிஸ் ஆகியோரின் பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து நொறுக்கினார். அபாரமாக ஆடி சதமடித்த ஜோ கிளார்க் 66 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 101 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. அவரது அதிரடி சதத்தால் 20 ஓவரில் 183 ரன்களை குவித்தது மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி.

184 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் டார்ஷி ஷார்ட் (15), மேத்யூ வேட்(35), டிம் டேவிட் (24), ஆசிஃப் அலி (4) ஆகிய அதிரடி வீரர்கள் இருந்தும் அவர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறியதால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 145 ரன்கள் மட்டுமே அடித்தது. 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி.

மகன் அர்ஜுன் அடித்த முதல் சதம்.. ஒரு தந்தையாக சச்சின் டெண்டுல்கர் பெருமை

அபாரமாக பந்துவீசிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் பவுலர்கள் ஆடம் ஸாம்பா மற்றும் லுக் உட் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
 

click me!