IPL Mini Auction: கொச்சியில் நடக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் 405 வீரர்கள் பங்கேற்பு!

By Rsiva kumarFirst Published Dec 16, 2022, 3:36 PM IST
Highlights

கொச்சியில் வரும் 23 ஆம் தேதி ஐபிஎல் மினி ஏலம் நடக்க உள்ள நிலையில், இதில் 405 வீரர்கள் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் வரும் 23 ஆம் தேதி கொச்சியில் நடக்க இருக்கிறது என்று பிசிசியை அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் ஏற்கனவே 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன. இந்த வீரர்களுக்கு அந்த அணிகள் மொத்தமாக ரூ.743 கோடி வரையில் செலவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எஞ்சியுள்ள 87 வீரர்களின் நிரப்பவே வரும் 23 ஆம் தேதி கொச்சியில் இந்த மினி ஏலம் நடக்க இருக்கிறது. இதில், வெளிநாட்டு வீரர்களுக்கு என்று 30 இடங்கள் உள்ளன. 

2022 டெஸ்ட் போட்டி சதம்: ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா முதலிடம்!

மொத்தமாக 991 வீரர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், 405 பேர் மட்டுமே ஏலத்திற்கு இறுதி செய்யப்பட்டுள்ளனர். வரும் 23 ஆம் தேதி கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடக்கவுள்ள நிலையில், வரும் 21 ஆம் தேதியே அனைத்து நிர்வாகிகளும், பயிற்சியாளர்களும் ஏலம் நடக்கும் ஹோட்டலுக்கு செல்கின்றனர். அங்கு நடக்கும் கூட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இந்த மினி ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், டிஜிட்டல் உரிமையை ஜியோ நிறுவனமும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ranji Trophy: மீண்டும் சதம் விளையாசி அதிரடி காட்டிய இஷான் கிஷான்!

click me!