2022 டெஸ்ட் போட்டி சதம்: ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா முதலிடம்!

By Rsiva kumarFirst Published Dec 16, 2022, 1:30 PM IST
Highlights

2022 ஆம் ஆண்டில் இந்தியா இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மட்டுமே சதம் அடித்துள்ளனர். இவர்களைத் தவிர மற்ற வீர்ர்கள் யாரும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டில் இந்தியா உள்ளூர் மற்றும் வெளியூர் என்று மொத்தம் 7க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதற்கு முன்னதாக, தென் ஆப்ரிக்கா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், அதில் ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரைத் தவிர மற்ற இந்திய வீர்ர்கள் யாரும் சதம் அடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

IND vs BAN Test Match Day 3: பாலோ ஆன் கொடுக்காமல் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா - வங்கதேசம் 150 ஆல் அவுட்!

கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப் டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று மொஹாலியில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 96 ரன்கள் எடுத்தார். கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரிமிங்காமில் நடந்த போட்டியில் அதிகபட்சமாக 146 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம் இந்த 2022 ஆம் ஆண்டில் அதிக சதம் அடித்த வீரர்களில் ரிஷப் பந்த் இடம் பிடித்துள்ளார்.

Ranji Trophy: மீண்டும் சதம் விளையாசி அதிரடி காட்டிய இஷான் கிஷான்!

இதே போன்று ரவீந்திர ஜடேஜாவும் இரண்டு முறை சதம் அடித்த வீர்ர்களின் பட்டியலில் ரிஷப் பந்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடந்து வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் புஜாரா 90 ரன்களிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஆவது இன்னிங்ஸில் சுப்மன் கில் 72 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!