ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு..! ஆகஸ்ட் 28ல் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

By karthikeyan VFirst Published Aug 2, 2022, 5:50 PM IST
Highlights

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இலங்கையில் நடக்க வேண்டிய ஆசிய கோப்பை தொடர், இலங்கையில் பொருளாதார சிக்கல் நீடிப்பதால், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் ஆடுகின்றன.

இதையும் படிங்க - நல்ல பிளேயரை சீரழித்துவிடாதீர்கள்..! ரோஹித்தை விளாசிய ஸ்ரீகாந்த்

ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிபெறும் மற்றொரு அணி ஆகிய 3 அணிகளும் உள்ளன. பி பிரிவில் இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் மோதும் முக்கியமான போட்டி ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் நடக்கிறது. துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் தான் அனைத்து போட்டிகளும் நடக்கின்றன. அனைத்து போட்டிகளுமே இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

போட்டி அட்டவணை:

ஆகஸ்ட் 27: இலங்கை - ஆஃப்கானிஸ்தான் (க்ரூப் பி) - துபாய்
ஆகஸ்ட் 28: இந்தியா - பாகிஸ்தான் (க்ரூப் ஏ) - துபாய்
ஆகஸ்ட் 30: வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் (க்ரூப் பி) - ஷார்ஜா
ஆகஸ்ட் 31: இந்தியா - குவாலிஃபயர் (க்ரூப் ஏ) - ஷார்ஜா
செப்டம்பர் 1: இலங்கை - வங்கதேசம் (க்ரூப் பி) - துபாய்
செப்டம்பர் 2: பாகிஸ்தான் - குவாலிஃபயர் (க்ரூப் ஏ) - ஷார்ஜா

இதையும் படிங்க - நல்ல வேளை, தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்தார்..! பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவ்வளவுதான்

இத்துடன் லீக் சுற்று முடிகிறது. இந்த சுற்றின் முடிவில் க்ரூப் ஏ மற்றும் க்ரூப் பி ஆகிய இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த 4 அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதும்.

செப்டம்பர் 3: பி1 - பி2 - ஷார்ஜா
செப்டம்பர் 4: ஏ1 - ஏ1 - துபாய்
செப்டம்பர் 6: ஏ1 - பி1 - துபாய்
செப்டம்பர் 7: ஏ2 - பி2 - துபாய்
செப்டம்பர் 8: ஏ1 - பி2 - துபாய்
செப்டம்பர் 9: ஏ2 - பி1 - துபாய்
செப்டம்பர் 11: இறுதிப்போட்டி - துபாய்
 

click me!