
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி செயிண்ட் கிட்ஸ்&நெவிஸில் நடந்தது.
இந்திய அணியினரின் லக்கேஜ் குறித்த நேரத்தில் டிரினிடாட் ஏர்போர்ட்டிலிருந்து வந்து சேராததால் போட்டி 3 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையும் படிங்க - நல்ல வேளை, தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்தார்..! பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவ்வளவுதான்
ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
கைல் மேயர்ஸ், பிரண்டன் கிங், நிகோலஸ் பூரன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், ஷிம்ரான் ஹெட்மயர், டெவான் தாமஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், ஒடீன் ஸ்மித், அல்ஸாரி ஜோசஃப், ஒபெட் மெக்காய்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா முதல் பந்திலேயே டக் அவுட்டானார். ரோஹித்தை வீழ்த்தி தனது விக்கெட் வேட்டையை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஒபெட் மெக்காய், அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ்(11), ரவீந்திர ஜடேஜா (27), தினேஷ் கார்த்திக் (7), அஷ்வின்(10), புவனேஷ்வர் குமார்(1) ஆகியோரை வீழ்த்தினார்.
ஷ்ரேயாஸ் ஐயர் (10), ரிஷப் பண்ட்(24), ஹர்திக் பாண்டியா(31) ஆகியோரும் பெரிதாக சோபிக்கவில்லை. யாருமே அதிரடியாக ஆடாததுடன், பின்வரிசை வீரர்களை ஒபெட் மெக்காய் மளமளவென சரித்ததால் 19.4 ஓவரில் 138 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையும் படிங்க - சாரி கோலி.. இனியும் உங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை..? ஆசிய கோப்பைக்கான அணியில் புறக்கணிப்பு..?
139 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பிரண்டன் கிங் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 52 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவித்தார். மிடில் ஆர்டரில் டெவான் தாமஸ் 19 பந்தில் 31 ரன்களை விளாச, 19.2 ஓவரில் இலக்கை அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது.