
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று செயிண்ட் கிட்ஸ்&நெவிஸில் நடக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனும் சிக்ஸர் மன்னனுமான ரோஹித் சர்மா, 4 சிக்ஸர் அடித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷாஹித் அஃப்ரிடியை பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்தை பிடிப்பார்.
ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 250 சிக்ஸர்கள், டி20 கிரிக்கெட்டில் 159 சிக்ஸர்கள் மற்றும் டெஸ்ட்டில் 64 சிக்ஸர்கள் என மொத்தமாக 473 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
இதையும் படிங்க - நல்ல வேளை, தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்தார்..! பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவ்வளவுதான்
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் 553 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடி476 சிக்ஸர்களுடன் 2ம் இடத்திலும், ரோஹித் சர்மா 473 சிக்ஸர்களுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.
இதையும் படிங்க - சாரி கோலி.. இனியும் உங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை..? ஆசிய கோப்பைக்கான அணியில் புறக்கணிப்பு..?
எனவே ரோஹித் சர்மா இன்னும் 4 சிக்ஸர்கள் அடித்தால் அஃப்ரிடியை பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்தை பிடித்துவிடுவார். கிறிஸ் கெய்லை விட 80 சிக்ஸர்கள் மட்டுமே ரோஹித் சர்மா பின் தங்கியிருப்பதால், அவரது கிரிக்கெட் கெரியர் முடிவதற்குள் கிறிஸ் கெய்லையும் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துவிடுவார் ரோஹித்.