WI vs IND: டி20 கிரிக்கெட்டில் இன்னும் ஒரேயொரு வெற்றி.. இந்தியாவிற்கு தனித்துவ சாதனை

By karthikeyan VFirst Published Aug 1, 2022, 5:09 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான சாதனையை படைக்கும்.
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை வலுவாக தக்கவைக்கும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. 

இதையும் படிங்க - சாரி கோலி.. இனியும் உங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை..? ஆசிய கோப்பைக்கான அணியில் புறக்கணிப்பு..?

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி பெற்றால், டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்தியாவின் 15வது வெற்றியாக அமையும். 

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை பாகிஸ்தானுடன் பகிர்ந்துகொள்ளும் இந்தியா. பாகிஸ்தானும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 15 வெற்றிகளை பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க - T20 WC-க்கு சரியான இந்திய அணியை செலக்ட் பண்ணுப்பா ஷர்மா! ஏதாவது டவுட்னா எனக்கு கால் பண்ணு! ஸ்ரீகாந்த் அட்வைஸ்

மேலும் டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை  இந்திய அணி தான் வைத்துள்ளது. இலங்கைக்கு எதிராக 17 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. இதுதான் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி பெற்ற அதிக வெற்றியாகும்.
 

click me!