விராட் கோலியை கட்டியணைத்து ஆறுதல் கூறிய அனுஷா சர்மா!

By Rsiva kumar  |  First Published Nov 19, 2023, 11:28 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், அழுது கொண்டே வெளியேறிய விராட் கோலியை அனுஷ்கா சர்மா கட்டியணைத்து ஆறுதல் கூறியுள்ளார்.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பீல்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.

ஹோம் டீம் தான் டிராபியை கைப்பற்றும் என்ற டிரெண்டை உடைத்த ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன்!

Tap to resize

Latest Videos

பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் நிதானமாகவும், தேவைப்படும் போது பவுண்டரியும் விளாசினர். இறுதியாக டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 120 பந்துகளில் 15 பவுண்டரி உள்பட 4 சிக்ஸர்கள் உள்பட 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஒத்தை ஆளாக இந்தியாவை சுருட்டிய ஹெட் - 6ஆவது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!

மார்னஷ் லபுஷேன் 58 ரன்கள் எடுக்க, கிளென் மேக்ஸ்வெ 2 ரன்கள் எடுத்து வெற்றி தேடிக் கொடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற இந்திய அணி முக்கியமான போட்டியான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து ஒட்டுமொத்த 130000 ரசிகர்களையும் ஏமாற்றியுள்ளனர். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், வெளியேறிய விராட் கோலிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா கட்டியணைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

IND vs AUS World Cup 2023 Final: குருவி சேர்ப்பது போன்று ஒன்னு ஒன்னாக சேர்த்த இந்தியா 240 ரன்னுக்கு ஆல் அவுட்!

இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 765 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து தொடர் நாயகன் விருது பெற்றார்.

click me!