இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டியின் போது அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் கேட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வருடத்திற்கு ஓரு படத்தில் மட்டுமே நடித்து அதனை வெளியிட்டு அதன் பிறகு ஊர் சுற்றும் வாலிபனாக பைக டிராவல், கார் டிராவல் என்று சுற்றுலா செல்லும் அஜித்தை பார்ப்பதே அரிதான ஒன்றாகிவிட்டது. அப்படியிருக்கும் போது எப்படியும் அஜித்தை இன்று பார்த்திடமாட்டோமா, நாளை பார்த்திடமாட்டோமா என்று ஏங்கி தவிக்கும் ரசிகர்களுக்கு அவர் நடிக்கும் படமும், படங்களின் அப்டேட்டும் தான் ஆறுதலான ஒன்று.
இந்தியா – பாகிஸ்தான் போட்டியை தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அப்படி, அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித் விடாமுயற்சி படத்திற்காக பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டியின் போது அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
கடைசி ரவுண்ட் ராபின் லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!
கிரிக்கெட் போட்டியில் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களிடமும் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்பது வழக்கமாகி வருகிறது. அவர்களை ஏமாற்றாமல் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கொடுத்தால் கொண்டாட்டமாக இருக்கும். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிசிசிஐ ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்தியது – பங்கஜ் சவுத்ரி!
டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், ஆடிய இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 12 ஆம் தேதி புளோரிடாவில் 4ஆவது டி20 போட்டியும், 13 ஆம் தேதி 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சஹால் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!