ரோகித் சர்மாவிற்குப் பதிலாக கேப்டனாகும் அஜிங்கியா ரஹானே?

By Rsiva kumar  |  First Published Jun 16, 2023, 3:19 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அஜிங்கியா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதையடுத்து இந்தியா வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

லைகா கோவை கிங்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை!

Tap to resize

Latest Videos

இதற்கான இந்திய அணி இன்னும் ஒரு வாரத்தில் அதாவது, வரும் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஜூலை 16 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி முடிகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெற வாய்ப்பு!

ஏற்கனவே ஒன்றரை மாதங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு, அதே நிலையில் இங்கிலாந்து சென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷில் இறுதிப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். இதன் காரணமாக அடுத்து வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி விளையாட உள்ள டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

5 பவுண்டரி, 5 சிக்ஸர் விளாசி அதிரடி காட்டிய ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன்; புனேரி பாப்பா டீம் வெற்றி!

அப்படி அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக இருப்பார். எனினும், டெஸ்ட் தொடரில் அவர் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், டெஸ்ட் தொடருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய அஜிங்கியா ரஹானே கேப்டனாக செயல்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் டெஸ்ட் தொடரில் இடம் பெற வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

click me!