பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் சீனியர் வீரர்கள்.. ப்ரமோஷன் பெறும் 2 தரமான பேட்ஸ்மேன்கள்

By karthikeyan VFirst Published Dec 12, 2022, 9:38 PM IST
Highlights

பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்திலிருந்து அஜிங்க்யா ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் விடுவிக்கப்படுகிறார்கள்.
 

பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தத்தை வெளியிட்டுவருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் ஆகிய இருவரும் 3 ஃபார்மட்டுக்குமான வீரர்களாக வளர்ந்துள்ளார்கள். சூர்யகுமார் யாதவ் 2022ம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்ததுடன், ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தார். மேலும் ஐசிசி டி20 ரேங்கிங்கில் முதலிடம் பிடித்தார். 

ஷிகர் தவானை தூக்கியெறிய துணிந்த பிசிசிஐ..! ரோஹித் கையில் தவான் குடுமி

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் மாபெரும் சக்தியாக வளர்ந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அதேபோல ஷுப்மன் கில்லும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது டெஸ்ட் அணியிலும் ஓபனிங் பேட்ஸ்மேனாக வளர்ந்துள்ளார். எனவே கடந்த ஒப்பந்தத்தில் ரூ.3 கோடியை ஊதியமாக கொண்ட  சி பிரிவில் இருந்த இவர்கள் இருவரும் அடுத்த பிசிசிஐ ஒப்பந்தத்தில் ரூ.5 கோடி ஊதியமாக கொண்ட பி பிரிவிற்கு ப்ரமோட் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.

டி20 அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பி பிரிவிலிருந்து ஏ பிரிவிற்கு ப்ரமோட் செய்யப்படவுள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே உள்ள ஏ பிரிவிற்கு ப்ரமோட் செய்யப்படவுள்ளார்.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

டெஸ்ட் அணியின் நட்சத்திர மற்றும் முன்னணி வீரர்களாக இருந்த அஜிங்க்யா ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவருமே டெஸ்ட் அணியில் இடத்தை இழந்துவிட்டதால், அவர்கள் இருவரும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!