இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு டப்ளின் மைதானத்தில் நடக்கிறது.
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று இரவு டப்ளின் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா பீல்டிங் தேர்வு செய்தார். அதன் படி முதலில் ஆடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Farmer Dhoni: ஏன் விவசாயியாக ஆனேன்? உண்மையை உடைத்த எம்.எஸ்.தோனி!
இதில், கார்டிஸ் கேம்பர் 39 ரன்களும், பேரி மெக்கார்த்தி அதிரடியாக விளையாடி 51 ரன்களும் எடுத்தனர். இதன் மூலமாக அயர்லாந்து 139 ரன்கள் எடுத்தது. பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்க்க தொடங்கினர். எனினும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இறங்கி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து வாழ்வா, சாவா கட்டத்தில் உள்ள சஞ்சு சாம்சன் ஒரு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது மழை குறுக்கீடு இருந்தது. விடாமல் பெய்த மழை காரணமாக இரு கேப்டன்களையும் அழைத்து நடுவர்கள் பேசினர். அதன் பிறகு டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, 6.5 ஓவர்களில் அயர்லாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
IRE vs IND 1st T20: அயர்லாந்தை தட்டி தூக்கிய இந்தியா; கடைசில வான வேடிக்கை காட்டிய மெக்கர்த்தி!
ஆனால், இந்திய அணியோ 6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. இதன் காரணமாக இந்திய அணி 2 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பந்து வீச்சு தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
Ireland vs India 1st T20: முதல் ஓவரிலேயே 2 விக்கெட் எடுத்த பூம் பூம் பும்ரா!
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டி20 போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியும் டப்ளின் மைதானத்தில் தான் நடக்க இருக்கிறது. இதில், இந்தியா வெற்றி பெற்றால் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.