லக்னோ அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் அவுட் செய்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் சுற்றின் 2ஆவது போட்ட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்து புதிய சாதனை படைத்த ஆகாஷ் மத்வால்!
பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஒவ்வொரு வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில், முக்கியமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். பிளே ஆஃப் போட்டியில் 3 ரன் அவுட் நடந்தது இது 2ஆவது முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2010 ஆம் ஆண்டு மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் அவுட் நடந்துள்ளது. இதில், சிஎஸ்கே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
முட்டி மோதியதால் ரன் அவுட்டாகி பரிதாபமாக சென்ற மார்கஸ் ஸ்டோய்னிஸ்!
கேமரூன் க்ரீன் வீசிய 12 ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது 2ஆவது ரன்னிற்கு ஓடும் போது தீபக் ஹூடா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் முட்டி மோதிக் கொண்டனர். இதனால், அவர் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.
இதே போன்று கிருஷ்ணப்பா கவுதமும் ரன் அவுட்டாகி வெளியில் சென்றுள்ளார். ஆம், பியூஷ் சாவ்லா வீசிய 3ஆவது பந்தில் அடித்து விட்டு ஓட முயற்சித்துள்ளார். ஆனால், ஹூடா வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்க பின் மீண்டும் கிரீஸுக்குள் சென்றார். அப்போது கேமரூன் க்ரீன் பந்தை தடுத்து ரோகித் சர்மாவிடம் வீசினார். அதற்குள் ரன் ஓட முயற்சித்த கிருஷ்ணப்பா கவுதம்மை, ரோகித் சர்மா சரியாக த்ரோ செய்து ரன் அவுட் செய்துள்ளார்.
ஜடேஜாவை சமாதானப்படுத்திய சிஎஸ்கே சிஇஓ: வைரலாகும் வீடியோ!
மறுபடியும் லக்னோ அணியில் ஒரு ரன் அவுட் சம்பவம் நடந்துள்ளது. இதில், 2 பேரை ரன் அவுட்டாக்கிவிட்ட தீபக் ஹூடா ரன் அவுட்டாகி வெளியில் சென்றார். போட்டியில் 14.5 ஆவது ஓவரில் நவீன் உல் ஹாக் அடித்த பந்திற்கு ரன் எடுக்க தீபக் ஹூடா ஓடியுள்ளார். ஆனால், க்ரின் பந்தை தடுத்து ஆகாஷ் மத்வாலிடம் வீசியிருக்கிறார். அவரோ ரோகித் சர்மாவிடம் வீச தீபக் ஹூடா பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!
sweet mangoes 🥭
he couldn't sacrifice his wicket for Hooda wat a player
Naveen the finisher 😂 pic.twitter.com/U1zqPWfKHm
This has to be the funniest run-out of IPL ever:
World No. 1 batsman Naveen Ul Haq making a full stretched dive to save his own wicket and run out Lucknow's last known recognized batsman Deepak Hooda 😆🤣😂 | pic.twitter.com/c3pE1rSqgC