மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் ஹூடாவுடன் முட்டி மோதியதால் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரன் அவுட்டாகி வெளியில் சென்றுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இதில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அப்படி ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் பிளே ஆஃப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 182 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த அணியில் முதலிடம் பிடித்துள்ளது.
பின்னர் கடின இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு பிரேரக் மான்கட் 3 ரன்னிலும், கைல் மேயர்ஸ் 18 ரன்னிலும், குர்ணல் பாண்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். ஒரு புறம் விக்கெட் மளமளவென விழுந்தது. ஆயுஷ் பதோனி 1 ரன் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் கோல்டன் டக்கில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
ஜடேஜாவை சமாதானப்படுத்திய சிஎஸ்கே சிஇஓ: வைரலாகும் வீடியோ!
அப்போது தான் மார்கஸ் ஸ்டோய்னிஸ் உடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். அப்போது தான் அந்த நிகழ்வு நடந்துள்ளது. கேமரூன் க்ரீன் வீசிய 12 ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது 2ஆவது ரன்னிற்கு ஓடும் போது தீபக் ஹூடா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் முட்டி மோதிக் கொண்டனர். இதனால், அவர் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.
யுவராஜ் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.320 கோடியா?
இதே போன்று கிருஷ்ணப்பா கவுதமும் ரன் அவுட்டாகி வெளியில் சென்றுள்ளார். ஆம், பியூஷ் சாவ்லா வீசிய 3ஆவது பந்தில் அடித்து விட்டு ஓட முயற்சித்துள்ளார். ஆனால், ஹூடா வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்க பின் மீண்டும் கிரீஸுக்குள் சென்றார். அப்போது கேமரூன் க்ரீன் பந்தை தடுத்து ரோகித் சர்மாவிடம் வீசினார். அதற்குள் ரன் ஓட முயற்சித்த கிருஷ்ணப்பா கவுதம்மை, ரோகித் சர்மா சரியாக த்ரோ செய்து ரன் அவுட் செய்துள்ளார்.
உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!
மறுபடியும் லக்னோ அணியில் ஒரு ரன் அவுட் சம்பவம் நடந்துள்ளது. இதில், 2 பேரை ரன் அவுட்டாக்கிவிட்ட தீபக் ஹூடா ரன் அவுட்டாகி வெளியில் சென்றார். போட்டியில் 14.5 ஆவது ஓவரில் நவீன் உல் ஹாக் அடித்த பந்திற்கு ரன் எடுக்க தீபக் ஹூடா ஓடியுள்ளார். ஆனால், க்ரின் பந்தை தடுத்து ஆகாஷ் மத்வாலிடம் வீசியிருக்கிறார். அவரோ ரோகித் சர்மாவிடம் வீச தீபக் ஹூடா பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.