லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆகாஷ் மத்வால் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேமரூன் க்ரீன் 41 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும், இம்பேக்ட் பிளேயராக வந்த நேஹல் வதேரா 23 ரன்களும் எடுத்தனர்.
முட்டி மோதியதால் ரன் அவுட்டாகி பரிதாபமாக சென்ற மார்கஸ் ஸ்டோய்னிஸ்!
பின்னர் கடின இலக்கை துரத்தை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்கள் மிடில் மற்றும் கடைசி வீரர்கள் வரையில் ஒவ்வொருவரும் மட்டமாக ஆடியதன் விளைவாக லக்னோ அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது.
புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆடியதன் காரணமாக பிளே ஆஃப் வரை வந்துள்ளது. இதில், பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாகை சூடியுள்ளது. முக்கியமாக ஆகாஷ் மத்வால் அபாரமாக பந்து வீசி 5 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஜடேஜாவை சமாதானப்படுத்திய சிஎஸ்கே சிஇஓ: வைரலாகும் வீடியோ!
தொடக்க வீரர் பெரேரக் மான்கட், ஆயுஷ் பதோனி, நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னாய் மற்றும் மோசின் கான் ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். அதுவும் 3.3 ஓவர்களில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த சீசனில் குறைவான ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும், 24 ஆண்டுகளுக்கு முன் ஆர்சிபி அணியின் வீரரான அனில் கும்ப்ளே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 5 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இதே போன்று கடந்த சீசனில் கேகேஆர் அணிக்கு எதிராக ஜஸ்ப்ரித் பும்ரா 10 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இந்த சீசனில் அறிமுகமான ஆகாஷ் மத்வால், தனது அறிமுக சீசனில் 5 ரன்கள் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக, ஹைதராபாத் அணிக்கு எதிராக அங்கீத் ராஜ்புட் 14 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
யுவராஜ் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.320 கோடியா?
இதே போன்று, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக கேகேஆர் வீரர் வருண் சக்கரவர்த்தி 20 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். குஜராத் அணிக்கு எதிராக ஹைதராபாத் வீரர் 25 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!