NZ vs AFG: 4 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமான சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் – புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான போடியில் ஆப்கானிஸ்தான் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மூலமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு குறைவான ரன்களில் ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.


ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 16ஆவது லீக் போட்டி இன்று சென்னையில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதில், வில் யங் 54 ரன்களும், டாம் லாதம் 68 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 71 ரன்களும் எடுக்கவே நியூசிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது.

215 கிமீ வேகத்தில் பறந்த ரோகித் சர்மா – 3 முறை வேகத்தை அளக்கும் கருவியில் சிக்கி அபராதம் விதிப்பு!

Latest Videos

பின்னர் கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு சொல்லிக் கொள்ளும்படி யாரும் ரன்கள் சேர்க்கவில்லை. தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்னிலும், இப்ராஹிம் ஜத்ரன் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹஷ்மானுல்லா ஷாஹிடி 8 ரன்னிலும், அஸ்மானுல்லா உமர்சாய் 27 ரன்னிலும் இக்ரம் அலிகில் 19 ரன்களிலும் வெளியேறவே ரஹ்மத் ஷா 36 ரன்கள் சேர்த்தார்.

NZ vs AFG: சாண்ட்னர் சுழலில் சுருண்ட ஆப்கானிஸ்தான் 139க்கு ஆல் அவுட் – நம்பர் 1 இடத்தில் நியூசிலாந்து!

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரஷீத் கான் 8 ரன்களில் வெளியேறினார். இறுதியாக ஆப்கானிஸ்தான் 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலமாக ஆப்கானிஸ்தான் விளையாடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது.

உலகக் கோப்பையில் 5ஆவது முறையாக இந்தியா – வங்கதேசம் பலப்பரீட்சை: வெற்றி யாருக்கு?

இந்தப் போட்டியில் 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றதன் மூலமாக 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் மற்றும் நெட் ரன் ரேட் அடிப்படையில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது.

கடைசில காட்டு காட்டுன்னு காட்டிய நியூசிலாந்து – கடைசி 10 ஓவர்களில் 103 ரன்கள் – மொத்தமாக 288 ரன்கள் குவிப்பு!

இந்த நிலையில், இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மூலமாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு குறைவான ரன்களில் ஆல் அவுட்டான அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதே ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 142 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!