நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் - கொண்டாடும் ரசிகர்கள்!

By Rsiva kumar  |  First Published Oct 15, 2023, 10:05 PM IST

இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பையின் 13 ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.


இந்தியாவில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில், 10 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இதுவரையில் விளையாடிய 2 போட்டியிலும் ஆப்கானிஸ்தான் தோல்வியை தழுவியிருந்தது. இங்கிலாந்து விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

Travid Head: எலும்பு முறிவிலிருந்து மீண்டு வந்த டிராவிஸ் ஹெட்; 19ஆம் தேதி இந்தியா வருகை!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தான் இரு அணிகளும் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் 13ஆவது லீக் போட்டியில் மோதின. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் குவித்தது. இதில், குர்பாஸ் அதிகபட்சமாக 80 ரன்கள் குவித்தார். இதே போன்று இக்ரம் அலிகில் 58 ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்தை கதி கலங்க செய்த குர்பாஸ் – ஆப்கானிஸ்தான் 284 ரன்கள் குவிப்பு!

பின்னர் கடின இலக்கை துரத்திய நடப்பி சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 2 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். டேவிட் மலானும் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை. அவர் 32 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோ ரூட் 11 ரன்களில் முஜீப் உர் ரஹ்மான் பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 9 ரன்களில் ஆட்டமிழக்க, லியாம் லிவிங்ஸ்டர் 10 ரன்களிலும், சாம் கரண் 10 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  கடைசி வரை போராடிய ஹாரி ப்ரூக் 66 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் அடில் ரஷீத் 20 ரன்களிலும், மார்க் வுட் 18 ரன்களிலும், ரீஸ் டாப்லே 15 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தசுன் ஷனாகா உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கம்: வேறு கேப்டன் யார்? ஆசிய கோப்பை vs உலகக் கோப்பை!

இறுதியாக இங்கிலாந்து 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவியது. பந்து வீச்சைப் பொறுத்த வரையில் ஆப்கானிஸ்தான் அணியில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டும், ரஷீத் கான் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். முகமது நபி 2 விக்கெட்டும், ஃபசல்ஹக் ஃபாரூக்கி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

நடுவர் என்ன கேட்டார்? என்று ஹர்திக் பாண்டியா கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா!

இந்த வெற்றியின் மூலமாக ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை இந்தப் போட்டியில் வீழ்த்தியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய 14 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் தோல்வியை தழுவி வந்துள்ளது.

பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக “ஜெய்ஸ்ரீராம்” முழக்கம்.!ஏற்றுக்கொள்ள முடியாதது- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

இந்த நிலையில் தான் 15ஆவது போட்டியில் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு டுனெடினில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. தற்போது 2ஆவது முறையாக 8 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!