ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டிராஸ் ஹெட் எலும்பு முறிவு பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், தென் ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தை கதி கலங்க செய்த குர்பாஸ் – ஆப்கானிஸ்தான் 284 ரன்கள் குவிப்பு!
இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டிற்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருந்தும் முதல் 2 போட்டிகளில் விளையாடவில்லை.
நடுவர் என்ன கேட்டார்? என்று ஹர்திக் பாண்டியா கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா!
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அவருக்கு கையிலிருந்த பேண்டேஜ் நீக்கப்பட்டது. தற்போது அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், வரும் வியாழன்று இந்தியாவிற்கு வர இருக்கிறார். வரும் 20 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் இடம் பெறமாட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் டெல்லியில் வரும் 25ஆம் தேதி நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
தசுன் ஷனாகா உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கம்: வேறு கேப்டன் யார்? ஆசிய கோப்பை vs உலகக் கோப்பை!