உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இதில், இந்தியா விளையாடிய ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் ரன் ரேட்டில் 1.821 என்று முன்னிலையில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் தான் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
நடுவர் என்ன கேட்டார்? என்று ஹர்திக் பாண்டியா கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா!
இந்திய அணி இன்னும் வங்தேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த 6 போட்டிகளில் இந்திய அணி குறைந்தது 5 அல்லது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் 10 அல்லது 8 புள்ளிகள் கிடைக்கும். இதன் மூலமாக மொத்தம் 16 அல்லது 14 புள்ளிகள் பெறும். அப்படி புள்ளிகள் பெறும் பட்சத்தில் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை எளிதாக பெற்றுவிடும்.
England vs Afghanistan: வெற்றிக்காக போராடும் ஆப்கானிஸ்தான் – டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்!
மேலும், இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பும் பிரகாசமாகிவிடும். வரும் 19 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இந்தியா மற்றும் வங்கதேச அனிகளுக்கு இடையிலான 17ஆவது உலகக் கோப்பை லீக் போட்டி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தசுன் ஷனாகா உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கம்: வேறு கேப்டன் யார்? ஆசிய கோப்பை vs உலகக் கோப்பை!