BBL: ஆரோன் ஃபின்ச் அதிரடி அரைசதம்.. சிட்னி தண்டரை வீழ்த்தி மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Dec 18, 2022, 6:00 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் தொடரில் ஆரோன் ஃபின்ச்சின் அதிரடி அரைசதத்தால் சிட்னி தண்டரை வீழ்த்தி மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகீறது. இன்று மெல்பர்னில் நடந்த போட்டியில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

சிட்னி தண்டர் அணி:

அலெக்ஸ் ஹேல்ஸ், மேத்யூ கில்க்ஸ் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, ஜேசன் சங்கா (கேப்டன்), அலெக்ஸ் ரோஸ், டேனியல் சாம்ஸ், ஆலிவர் டேவிஸ், கிறிஸ் க்ரீன், குரிந்தர் சந்து, பிரெண்டன் டாக்கெட், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.

IPL Mini Auction 2023: மினி ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 3 வீரர்கள்..!

மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி:

சாம் ஹார்பெர் (விக்கெட் கீப்பர்), நிக் மாடின்சன் (கேப்டன்), ஜாக் மெக்கர்க், ஆரோன் ஃபின்ச், ஜோனாதன் வெல்ஸ், ஆண்ட்ரே ரசல், அகீல் ஹுசைன், வில் சதர்லேண்ட், டாம் ரோஜர்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், முஜீபுர் ரஹ்மான்.

முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர் அணியில் ரைலீ ரூசோ அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 38 பந்தில் ரூசோ 53 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் ரோஸ் 23 பந்தில் 39 ரன்களும், ஆலிவர் டேவிஸ் 18 பந்தில் 33 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் சிட்னி தண்டர் அணி 174 ரன்கள் அடித்தது.

175 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மாடின்சன் 39 ரன்கள் அடித்தார். 4ம் வரிசையில் இறங்கிய ஆரோன் ஃபின்ச் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 43 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

FIFA World Cup 2022: ஃபைனலில் அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் பலப்பரீட்சை.! வின்னர், ரன்னருக்கான பரிசுத்தொகை எவ்வளவு.?

ஆரோன் ஃபின்ச்சின் அதிரடி அரைசதத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
 

click me!