ஆன்லைன் ரம்மி விவகாரம்; தமிழகத்தை தொடர்ந்து வரிசையாக மல்லுக்கட்டும் மாநிலங்கள்

By Velmurugan sFirst Published May 1, 2023, 6:10 PM IST
Highlights

ஆன்லைன் சூதாட்டத்தை பாஜக ஒரு போதும் ஆதரிக்காது. புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விரைவில் தடை செய்யப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என்று நீண்ட நாளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதன்படி அரசு 7-கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதல் கட்டமாக 33 புதிய வாகனங்களை கொள்முதல் செய்தது. இதனை அந்தந்த காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கடற்கரை சாலையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காவல் நிலையங்களுக்கான வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களர்களை  சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், காவல் நிலையங்களை நவீனப்படுத்தும் வகையில் காவல்துறைக்கு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 33 வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டது. இதேபோன்று சட்ட ஒழுங்கை பாதுகாப்பதிலும் போதைப்பொருள் ஒழிப்பதிலும் காவல்துறை தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

மேலும் காவல்துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையம், காவல்துறை தலைமை அலுவலகம் ஆகியவை புதிதாக கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தாண்டியா நடனமாடிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

காவலர் தேர்வில் உடல் தகுதி பெற்ற வீரர்களுக்கு விரைவில் எழுத்து தேர்வு நடைபெறும். ஊர்க்காவல் படைக்கு மேலும் 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று முதலில் பாஜக தான் முயற்சி எடுத்தது. அதற்கான கோப்புகள் உருவாக்கப்பட்டு அரசு அனுமதிக்கு சென்றுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை பாஜக  ஒருபோதும் அனுமதிக்காது. விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு புதுச்சேரியில் தடை விதிக்கப்படும்.

படுகொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்தினரிடம் ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்கிய கனிமொழி

காவல் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக கோப்புகள் தயார்  செய்யப்பட்டுள்ளன. விரைவில் பதவி உயர்வு அளிக்கப்படும். பள்ளிக்கல்வித்துறையில் இருந்து விளையாட்டு துறையை தனியாக பிரித்து விரைவில் அதற்கு அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

click me!